Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

வயலில் வேலை செய்து கொண்டிருந்த வாலிபர்…. திடீரென ஏற்பட்ட விபரீதம்…. வேதனையில் குடும்பத்தினர்….!!

பாம்பு கடித்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள சியாத்தமங்கை பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வீட்டின் பின்புறம் உள்ள வயலில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு பதுங்கி இருந்த பாம்பு ஒன்று செந்தில்குமாரை கடித்தது. இதில் மயங்கி விழுந்த செந்தில்குமாரை அருகில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி செந்தில்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் குறித்து செந்தில்குமாரின் தந்தை காளியப்பன் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |