கட்டுமான பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது பாம்பு கடித்து மூதாட்டி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அம்பேத்கர் நகர் பகுதியில் ஜானகி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம் போல் ஜானகி வேலைக்கு சென்று கட்டுமானப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது அவரது காலில் பாம்பு கடித்து விட்டது.
இதை பார்த்த சக தொழிலாளர்கள் ஜானகியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் ஜானகி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.