பான் கேக் செய்ய தேவையான பொருட்கள்:
மைதா மாவு – 3 கப்
சோடா உப்பு – கால் தேக்கரண்டி முட்டை – 2
நெய் அல்லது டால்டா – தேவைக்கேற்ப சீனி -1 அரை கப்
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் முட்டையை ஊற்றி நன்றாக நுரை பொங்க அடித்து கொள்ளவும். அதனுடன் சீனி, தண்ணீர், சோடா உப்பு, மைதா மாவு சேர்த்து நன்கு கலக்கவும்.
அடுப்பில் தோசைகல்லை வைத்து சூடானதும் சிறிது நெய் அல்லது டால்டா சேர்த்து, அதனுடன் கலந்து வைத்த மாவையும் சேர்த்து தோசை போல் விரித்து நன்கு வேக விடவும்.
அதனை இரண்டு பக்கமும் வேக வைத்து எடுத்தால் சுவையான பான் கேக் தயார். ஆப்பிள், வாழைப்பழம் சேர்த்து அலங்கரித்து கொள்ளலாம் .