Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

“சொத்து வரியுடன் பான் கார்டு, ரேஷன் கார்டு இணைப்பு”…. கோவை மாநகராட்சி வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!

கோவை மாநகராட்சி ஆணையாளர் மு. பிரதாப் ஐஏஎஸ் ஒரு முக்கிய ‌ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, கோவை மாநகராட்சியில் உள்ள அனைத்து குடியிருப்பு தாரர்களும் சொத்து வரி எண்ணுடன் குடும்ப அட்டையை இணைக்க வேண்டும். அதன் பிறகு வணிக நிறுவனங்கள் சொத்து வரி விதிப்பு எண்ணுடன் பான் கார்டு எண் அல்லது ஜிஎஸ்டி வரிவிதிப்பு எண்ணை இணைப்பது கட்டாயம். இதனையடுத்து குத்தகைதாரர்கள் குத்தகை ஒதுக்கீட்டு எண்ணுடன் பான் கார்டு எண் அல்லது ஜிஎஸ்டி எண்ணை இணைக்க வேண்டும்.

எனவே மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து குடியிருப்பு காரர்களும் தங்களுடைய சொத்து வரி விதிப்பு அட்டையுடன் குடும்ப அட்டை நகலையும் சேர்த்து  மாநகராட்சி அலுவலகத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். இதேபோன்று வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் சொத்துவரி புத்தக நகல் அட்டை, ஜிஎஸ்டி எண்ணுடன்  செல்ல வேண்டும். தினமும் காலை 9 மணி முதல் 4 மணிக்குள் மாநகராட்சி அலுவலகத்திற்குள் செல்ல வேண்டும். மேலும் இதற்கான கால அவகாசம்  ஜனவரி 31-ஆம் தேதி அன்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Categories

Tech |