Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“இதுல நிறையா லாபம் வரும்” பணமோசடி செய்த 3 பேர்…. போலீஸ் விசாரணை….!!

பங்குச் சந்தையில் அதிக பணம் லாபம் ஈட்டித் தருவதாக கூறிய 3 பேர் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள என்.ஜி.ஓ. காலனி பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பெருமாள்புரம் பகுதியில் வசிக்கும் சங்கரநாராயணன், சந்திரசேகர், செந்தில்குமார் ஆகிய 3 பேருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த 3 பேரும் முருகனிடம் பங்குச் சந்தை மூலம் தாங்கள் அதிக பணம் லாபம் சம்பாதிப்பதாக கூறியுள்ளனர். இதனை முருகன் நம்பி தனக்கும் பங்கு சந்தையில் அதிக லாபம் ஈட்டித்தரும் படி கடந்த ஜனவரி மாதம் ரூ.2 லட்சம் ரொக்கப் பணமாக கொடுத்துள்ளார். இந்த பணத்தை பெற்ற 3 பேரும் பெற்றுக் கொண்டு அதை பங்குச் சந்தையில் முதலீடு செய்து அதிக லாபம் ஈட்டித் தருவதாகக் முருகனிடம் கூறினார்கள். ஆனால் பல மாதங்கள் கடந்த பிறகும் முருகனுக்கு 3 பேரும் லாபம் ஈட்டி கொடுக்கவில்லை.

இதனால் அந்த 3 பேரிடமும் முருகன் தான் கொடுத்த 2 லட்சத்தை திருப்பி தரும்படி கேட்டுள்ளார். ஆனால் அதற்கு அவர்கள் மூவரும் பணத்தை பிறகு தருவதாக நாட்களை கடத்தி சென்றுள்ளனர். ஆனால் முருகன் பலமுறை அவர்களிடம் கேட்டும் பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை. இதனைத் தொடர்ந்து முருகன் நெல்லை மாநகர குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் செந்தில்குமார், சங்கரநாராயணன், சந்திரசேகர் ஆகிய 3 பேர் மீதும் பண மோசடி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |