Categories
தேனி மாவட்ட செய்திகள்

“கூடுதல் வட்டி கிடைக்கும்” விவசாயியை ஏமாற்றிய நபர்கள்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

பங்குச்சந்தையில் முதலீடு செய்வதாக கூறி ரூ.11 லட்சம் மோசடி செய்த 3 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தேனி மாவட்டத்தில் உள்ள போடி மூணாறு சாலையில் உள்ள தனியார் கல்லூரி அருகில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் செல்வம் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரேவிடம் புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் செல்வம் கூறியிருப்பதாவது, போடி அம்மாகுளம் புரபசர் காலனி பகுதியில் தனியார் நிறுவன ஊழியர் வேதமாணிக்கம், அழகேசன் ஆகியோர் சிவகங்கையில் செயல்படுகிற தனியார் பங்குச்சந்தை நிறுவனத்தில் முதலீடு செய்தால் கூடுதல் வட்டி தருவதாக கூறினர்.

இதனையடுத்து அந்த நிறுவனத்திற்கு என்னை அழைத்துச் சென்று கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள காவேரிப்பட்டணம் பகுதியில் வசிக்கும் சாகுல்அமீது என்பவரை அறிமுகம் செய்து வைத்தனர். அதன்பின் இவர்கள் 3 பேரும் சொன்னதை நம்பி நான் 8 லட்சமும் என்னுடைய தம்பி நல்லதம்பி என்பவர் 3 லட்சமும் முதலீடு செய்தோம். அதன்பின் நாங்கள் முதலீடு செய்த தொகைக்கு வட்டிக்காக வங்கியில் காசோலை கொடுத்தனர். அதில் ஒரு காசோலையை மட்டும் கொடுத்து பணம் எடுத்துள்ளனர். அதன் பிறகு வழங்கிய காசோலை பணம் இல்லாமல் திரும்பி வந்துவிட்டது.

இது குறித்து நாங்கள் அவர்கள் 3 பேரிடம் கேட்டபோது சரியாக பதில் கூறாமல் அவர்கள் எங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். அப்போது தான் எங்களுக்கு கணேசன், வேதமாணிக்கம் மற்றும் சாகுல்அமீது ஆகியோர் எங்களிடம் ரூ.11 லட்சம் மோசடி செய்திருப்பது தெரிய வந்தது. இதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பங்குச் சந்தையில் முதலீடு செய்த பணத்தை மீட்டு தரவேண்டும் என மனுவில் செல்வம் குறிப்பிட்டுள்ளார். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போடி நகர் போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அந்த உத்தரவின்படி காவல்துறையினர் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |