Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வீட்டுமனை வாங்கி தருவதாக கூறி…. ரூ.90 லட்சம் மோசடி செய்த நபர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

வீட்டுமனை வாங்கி தருவதாக கூறி 47 பேரிடம் ரூ.90 லட்சம் மோசடி செய்த ரியல் எஸ்டேட் ஏஜென்ட்டை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நெரிப்பெரிச்சல் பகுதியில் புவனேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் புவனேஸ்வரன் காவுத்தாம்பாளையம் பகுதியில் குறைந்த விலையில் வீட்டு மனை விற்பனை செய்யப்படுவதாகவும், முதலில் ரூ.1 லட்சம் முதல் 2 1\2 லட்சம் வரை கொடுத்து பதிவு செய்து கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார். மேலும் புவனேஸ்வரன் ஆறு மாதத்திற்குள் செய்து கொடுப்பதாக பணத்தை பெற்று ஒப்பந்தம் எழுதிக் கொடுத்துள்ளார்.

ஆனால் அதன்பின் 2 வருடங்களாகியும் வீட்டு மனையை கிரையம் செய்து கொடுக்காததால் வெள்ளிரவெளி பகுதியில் வசிக்கும் கதிர்வேல் மற்றும் அவருடைய 5 நண்பர்கள் ஆகியோர் குன்னத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் புவனேஸ்வரனை பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் 47 பேரிடம் ரூ.90 லட்சம் மோசடி செய்து கிரையம் செய்து கொடுக்காமல் இருப்பது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் புவனேஸ்வரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |