Categories
உலக செய்திகள்

’22 ஆண்டுகள் சிறை’…. பண மோசடி செய்த இந்தியர்…. தீர்ப்பு வழங்கிய அமெரிக்கா நீதிமன்றம்….!!

பண மோசடி செய்த குற்றத்திற்காக இந்தியர் ஒருவருக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அமெரிக்கர்களை ஏமாற்றி பணம் பறித்த இந்தியருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து வர்ஜீனியா நீதிமன்ற அட்டர்னியான ராஜ் பாரேக் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “ஸேஷாத்கான் பதான் என்னும் இந்தியர் தனது கூட்டாளிகளுடன் இணைந்து 4 ஆயிரத்திற்கும் மேலான அமெரிக்கா மக்களை ஏமாற்றி பணம் பறித்துள்ளார். மேலும் அவர்கள் புலனாய்வுத் துறை, போதை மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு மற்றும் பிற அரசு துறைகளில் உள்ள உயர் அதிகாரிகளை போன்று நடித்து பாதிக்கப்பட்டவர்களிடம் சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்போவதாக கூறி அவர்களை மிரட்டியுள்ளனர்.

குறிப்பாக நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக அவர்களிடம் பல கோடி ரூபாய் தொகை கேட்டு மிரட்டியுள்ளனர். இதனையடுத்து சிலரிடம் கடன் வாங்கி தருவதாகவும் ஏமாற்றி பண மோசடி செய்துள்ளனர். பெரும்பாலும் இதில்  பாதிக்கப்பட்டவர்கள் வயதானவர்கள் என்று கூறப்படுகிறது. தற்பொழுது அவர்கள் தங்களது சேமிப்புகளை இழந்து மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இந்த பண மோசடி சம்பவத்துக்கு மூலக்காரணமாக செயல்பட்ட ஸேஷாத்கான் பதானுக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வர்ஜீனியா மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது” என்று கூறியுள்ளார்.

Categories

Tech |