Categories
சினிமா தமிழ் சினிமா

“ரூ.200 கோடி பண மோசடி”…. நடிகை ஜாக்குலின் மீது பாய்ந்த அவதூறு வழக்கு….!!!!

பெங்களூருவை சேர்ந்த இடைத் தரகர் சுகேஷ் சந்திரசேகர் ரூபாய்.200 கோடி பண மோசடி செய்த வழக்கில் கைதாகி திகார் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த மோசடியில் பிரபல இந்தி நடிகையான ஜாக்குலினுக்கு தொடர்பு உள்ளதாக அமலாக்கத்துறை வழக்குப்பதிந்தது. அதாவது, மோசடி செய்த பணத்தில் சுகேஷ் ரூபாய்.7 கோடி மதிப்புள்ள நகைகளையும்,பரிசுப் பொருட்களையும் ஜாக்குலினுக்கு வாங்கி கொடுத்திருப்பதாக குற்றப் பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று பிரபல இந்தி நடிகை நோரா பதேஹியும் சுகேஷ் சந்திரசேகரிடமிருந்து ரூ.1 கோடி கார் உள்ளிட்ட பரிசுப்பொருட்கள் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொண்டது.

இந்நிலையில் ஜாக்குலின் மீது நோரா பதேஹி நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், ”என் மீது களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்தில் திட்டமிட்டு சதி செய்து இவ்வழக்கில் என்னை ஜாக்குலின் சிக்க வைத்துள்ளார். என்னுடன் நேரடியாக மோத முடியாமல் இது போன்ற செயல்களில் அவர் ஈடுபடுகிறார். மாடலிங் துறையிலும், திரையுலகிலும் என் வளர்ச்சி பிடிக்காமல் பொய்வழக்கு போட்டிருக்கின்றனர்” என நோரா பதேஹி கூறியுள்ளார்.

Categories

Tech |