காலங்காலமாக கட்டுமான பணிகளை செய்துவந்த பிற்படுத்தப்பட்ட சமூக மக்கள் வசிக்கும் கிராமம் தற்போது உலகின் முதன்மை பணக்கார கிராமமாக மாறியுள்ளது.
இந்தியாவிலுள்ள குஜராத் மாநிலத்திலிருக்கும் குட்ச் மாவட்டத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூக மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த மாவட்டத்தில் வாழும் 18 கிராமங்களைச் சேர்ந்தவர்கள் காலங்காலமாக கட்டுமான பணிகளை செய்து வருகிறார்கள். இவர்கள் குஜராத்தினுள்ளும், வெளிநாட்டிற்கும் சென்று தங்களுடைய பாரம்பரிய கட்டுமான பணிகளை செய்து வருகிறார்கள்.
இந்த 18 கிராமத்திலும் மதாபர் என்னும் கிராமம் உலகிலேயே முதன்மை பணக்கார கிராமமாக கருதப்படுகிறது. இந்த கிராமத்தில் மொத்தமாக 7,600 குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் அந்த கிராமத்திலுள்ள வங்கிகளில் மொத்தமாக 5,000 கோடி ரூபாய் வரை சேமித்து வைத்துள்ளார்கள்.
இதனையடுத்து இவர்கள் தங்களுடைய கட்டுமான பணிகளுக்காக வெளிநாடுகளுக்கு சென்று சம்பாதிக்கும் முக்கிய நகரமாக லண்டன் அமைகிறது. மேலும் லண்டனில் கட்டுமான பணிகளை மேற்கொள்ள மதபார் கிராமத்திற்கு என்றே தனியாக கூட்டமே உருவாக்கப்பட்டுள்ளது.