Categories
தேசிய செய்திகள்

காசு கேட்டா தரமாட்டியா?…. திருநங்கையின் வெறிச்செயல்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

பணம் கொடுக்காத  கடைக்காரரை திருநங்கை கட்டையால் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் பகுதியில் சங்கீதா டிரேடர்ஸ் என்ற மளிகை கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்த கடையை கணேஷ் என்பவர் பார்த்து வருகிறார். இங்கு திருநங்கைகள் சிலர் தினசரி வந்து 10, 20 ரூபாய் பணத்தை பெற்றுச்செல்வது வழக்கம். இந்நிலையில் இந்த கடைக்கு திருநங்கை ஒருவர் வந்து 300 ரூபாய் கேட்டு தொல்லை கொடுத்துள்ளார். ஆனால் அந்த பணத்தை கொடுக்க மறுத்த கணேஷ் திருநங்கையை வெளியே அனுப்பியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த திருநங்கை கட்டையால் கணேஷை தாக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அந்த பகுதியில் காவல்துறையினர் இருந்தும் இந்த சம்பவத்தை தடுக்க முயற்சி செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து சிறிது நேரத்துக்கு பின் மளிகை கடைக்கு  வந்த காவல்துறையினர் திருநங்கையை மிரட்டி அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.

இந்த காட்சிகள் கடையிலிருந்து சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறியபோது “இரவு நேரங்களில் வில்லியனூர் பைபாஸ் சாலையில் இருபுறமும் நின்று கொண்டு அப்பகுதியில் செல்லும் எங்களை அச்சுறுத்தும் விதமாக திருநங்கைகள் நடந்து கொள்வதாகவும், அவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும்” அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |