தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நடைபெற்ற மோசடி தொடர்பாக விசாரணை நடத்த இயக்குனர் சிவனேசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் மேல் மலை கிராமத்தில் வசிக்கும் கலியபெருமாள் உள்பட 2 விவசாயிகள் பெயரில் நகைக் கடன் வழங்கப்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் விவசாயிகள் இருவரும் குறிப்பிட்ட கூட்டுறவு வங்கியில் நகை கடன் பெற வில்லை எனவும், தங்களது பெயரில் யாரோ மர்ம நபர் போலியாக கையெழுத்துப் போட்டு கடன் பெற்று இருப்பதாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இது பற்றி துணை காவல்துறை சூப்பிரண்டு விசாரணை நடத்தி வருகிறார்.
இதனை அடுத்து கூட்டுறவு வங்கியில் நடைபெற்ற மோசடி பற்றி கூட்டுறவு துறை சார்பாக விசாரிக்க வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நிர்வாக இயக்குனர் சிவனேசன் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். பின்னர் இவர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்துக்கு நேரில் சென்று அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் நகைக்கடன் மோசடி குறித்து விசாரணை நடத்தி அதன் அறிக்கை கூற்றை துணை பதிவாளர் அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளார். மேலும் விசாரணை தொடர்பாக கூட்டுறவுத் துறை அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது இது பற்றி தற்போது எதுவும் சொல்வதற்கு இல்லை என கூறியுள்ளார்.