ஓணம் பண்டிகையை முன்னிட்டு சேலத்தில் பூக்களின் விலை 2 மடங்கு உயர்ந்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள மலர்ச்சந்தையில் பூக்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. அடுத்தடுத்து சுப முகூர்த்த தினம் என்பதால் ஏராளமான திருமணங்கள், புதுமனை புகுவிழா உள்ளிட்ட விசேஷ வைபவங்களும் நடைபெற உள்ளது.
இதன் காரணமாக பூக்களின் விலையும் இரு மடங்காக அதிகரித்துள்ளது. அதன்படி 400 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட குண்டுமல்லி தற்போது 800 முதல் 1000 ரூபாய்க்கும், ஜாதிமல்லி ஒரு கிலோ 250 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. நேற்று முன்தினம் ஒரு கிலோ 200 ரூபாயாக இருந்த கனகாம்பரம், இன்று ஒரு கிலோ 1000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. விலை அதிகரித்த போதிலும் விற்பனை குறையவில்லை என்பதால் பூ வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.