Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பணம் தர மறுத்த மனைவி… குடி மயக்கத்தில் விஷத்தை அருந்திய கணவர்… பரிதவிக்கும் குடும்பம்…!!!

தேன்கனிக்கோட்டை பகுதியில் மனைவி மது அருந்த பணம் தராததால் கணவர் மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேன்கனிப்கோட்டை தாலுகாவில் உள்ள அந்தேவனப்பள்ளி என்ற கிராமத்தில் குமார் (வயது 35) மற்றும் அவரின் குடும்பம் வசித்துவந்தனர். அக்குடும்பத்தினர் மிகுந்த வறுமையில் வாழ்ந்து வந்தனர். அதனை பொருட்படுத்தாத குடும்ப தலைவனான குமார் தன் மனைவியிடம் மது அருந்துவதற்கு பணம் வேண்டும் என்று கேட்டுள்ளார். ஆனால் அவரின் மனைவி பணம் கொடுக்க மறுத்துள்ளார். மது போதை கண்ணை மறைக்கும் அளவில் அவர் இருந்ததால் பூச்சி மருந்து குடித்து மயங்கி  கிடந்தார்.

அதனைக் கண்ட குடும்பத்தினர் அவரை தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பயன் தராத நிலையில் மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்பு அவசர சிகிச்சை பயனின்றி அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தேன்கனிக்கோட்டையில் உள்ள உயர் அதிகாரி சரவணன் வழக்குப்பதிவு செய்து வழக்கினை விசாரித்து வருகின்றார்.

Categories

Tech |