Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

பணம் தர மறுத்ததால்…. மகனின் மூர்க்கத்தனமான செயல்…. தந்தைக்கு நடந்த சோகம்…!!

அரியலூர் மாவட்டத்தில் விவசாயி பணம் தராததால் அவரது  மகனே அவரை கட்டையால் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது  .

அரியலூர் மாவட்டம் உடையார் பாளையம் பகுதியில் மூர்த்தியாய் காலனி தெருவில் 75 வயதுடைய குஞ்சு என்பவர் தன் குடும்பத்தாருடன் வசித்து வருகிறார். இவர் விவசாய தொழில் செய்து வருகிறார். இவருக்கு வேல்முருகன் என்று ஒரு மகன் இருக்கிறார். இவர் தையல் தொழில் செய்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சாலைகளை விரிவுபடுத்த நெடுஞ்சாலைத்துறையினர் விவசாயிக்கு சொந்தமான இடத்தை வாங்கிக்கொண்டு அதற்குண்டான பணத்தை அவரது வங்கி கணக்கில் செலுத்தி உள்ளனர்.

இந்நிலையில் விவசாயின் வங்கி கணக்கில் உள்ள பணத்தை கடந்த 8ஆம் தேதி தனக்கு வேண்டும் என்று அவரது மகன் கேட்டுள்ளார். ஆனால் அவர் பணத்தை தர முடியாது என்று கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அதில் கோபமடைந்த அவரது மகன் உருட்டுக்கட்டையால் விவசாயியை அடித்தாதல்  . படுகாயம் அடைந்த விவசாயி காவல்துறையிடம் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில்  காவல்துறை  அவரது மகன் மீது வழக்கு பதிவு செய்து அவரை விசாரித்து வந்தனர்.

இதனையடுத்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விவசாயிக்கு  சிகிச்சை அளித்து வந்து உள்ளனர். அதன்பிறகு மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.  ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலன் அளிக்கமால் விவசாயி  பரிதாபமாக உயிரிழந்து விட்டார் . இந்நிலையில் விவசாயி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர் உயிரிழந்ததால் அவர் மகன் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Categories

Tech |