Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

மாணவிக்கு கொடுத்த மிரட்டல்…. வசமா சிக்கிய மாணவன்…. கைது செய்த காவல்துறையினர்….!!

மாணவியை ஆபாசமாக படம் எடுத்து நகை மற்றும் பணம் கேட்டு மிரட்டிய மாணவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள ஸ்ரீபெரும்புதூரில் வசித்து வரும் 17 வயதுள்ள 11-ஆம் வகுப்பு மாணவன் ஒருவர் அதே பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு பயிலும் 16 வயது மாணவியுடன் நட்பு வைத்துள்ளார். இதனால் இருவரும் சேர்ந்து தனி இடங்களுக்குச் சென்று செல்போனில் புகைப்படம் எடுத்துள்ளனர். இந்நிலையில் மாணவன் சில நாட்களுக்கு முன்பு அந்த மாணவியிடம் நகை மற்றும் பணத்தை கேட்டுள்ளார்.

ஆனால் மாணவி நகை மற்றும் பணத்தை கொடுக்க மறுத்ததால் தன்னுடன் செல்போனில் நெருக்கமாக உள்ள புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மாணவன் மிரட்டியுள்ளார். இதனையடுத்து அந்த மாணவி பெற்றோர்களுக்கு தெரியாமல் நகை மற்றும் பணத்தை மாணவனிடம் கொடுத்துள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்து அவர்கள் ஸ்ரீபெரும்புதூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். அந்தப் புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மாணவரை கைது செய்ததோடு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

Categories

Tech |