3 லட்சம் ரூபாயை திருடிய மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள நாகமலை புதுக்கோட்டை பகுதியில் லின்சிஜோன்ஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் காளவாசல் பை-பாஸ் சாலையில் உள்ள ஒரு கல்லூரி முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அவர் ஒரு பையில் ரொக்கப் பணமாக 3 லட்சம் ரூபாயை வைத்திருந்தார்.
அந்த ரூபாயை மர்மநபர்கள் யாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்து லின்சி ஜோன்ஸ் கரிமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.