Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பேருந்தில் சென்று கொண்டிருந்த போது…. கைப்பையை அறுத்து பணம் திருட்டு…. பெண்ணை கைது செய்த போலீஸ்….!!

பேருந்தில் பெண்களின் கைப்பையை அறுத்து பணம் திருடிய பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சிவக்கொல்லைப்பகுதியில் இளவரசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலைச்செல்வி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் இவரும் அதே பகுதியில் வசிக்கும் சுரேஷ் என்பவரின் மனைவி கார்த்திகா என்பவரும் பட்டுக்கோட்டையிலிருந்து சேதுபாவாசத்திரம் செல்லும் தனியார் பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது லட்சத்தோப்பு பகுதியில் பேருந்து சென்று கொண்டிருந்த போது அருகில் நின்று கொண்டிருந்த பெண் ஒருவர் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி வேகமாக சென்றுள்ளார்.

இதனையடுத்து கலைச்செல்வி, கார்த்திகா ஆகிய இருவரும் பேருந்து கிளம்பும்போது அவர்கள் கையில் வைத்திருந்த பையை பார்த்தபோது அந்த பை அறுக்கப்பட்டு அதில் இருந்த , பர்ஸ், பணம், ஆதார்கார்டு ஆகியவை திருட்டு போனது தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து இருவரும் சேர்ந்து பேருந்தை விட்டு கீழே இறங்கினர். அப்போது அவர்கள் அருகில் நின்று கொண்டிருந்த பெண் வேகமாக நடந்து சென்றதைப் பார்த்து அந்த பெண்ணை பிடித்து அங்குள்ள பொதுமக்களும் விசாரணை நடத்தினர். அப்போது அந்த பெண் கலைச்செல்வி வைத்திருந்த பை,  ஆதார் கார்டு ஆகியவற்றை திருடியது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அந்த பெண் கள்ளக்குறிச்சி பகுதியில் வசிக்கும் முத்து என்பவரின் மனைவி கலைச்செல்வி என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் மீது கும்பகோணம் காவல்நிலையத்தில் ஏற்கனவே திருட்டு வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கலைச்செல்வியை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |