வீடு புகுந்து திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஒட்டப்பிடாரம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் டெய்லராக வேலைபார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு முருகனும் அவரது மனைவியும் வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டனர். இதையடுத்து மதியம் சாப்பிடுவதற்காக முருகன் வந்தபோது வீட்டில் புகுந்து பணம், பொருட்களை மர்ம நபர் திருடி சென்றது தெரியவந்துள்ளது. இது குறித்து முருகன் ஒட்டப்பிடாரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் காட்டுநாயக்கன்பட்டி பகுதியில் வசிக்கும் முருகன் என்பவர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் முருகனை கைது செய்து நடத்திய விசாரணையில் இவர் ஏற்கனவே கீழத்தட்டாப்பாறையில் உள்ள ஒரு வீட்டில் செல்போன் மற்றும் ரூ.50,000 பணத்தை திருடியது தெரியவந்துள்ளது. மேலும் காவல்துறையினர் அவரிடம் இருந்து செல்போன் மற்றும் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.