பணம் வைத்து சீட்டு விளையாட்டில் சூதாடியதால் நடிகர் ஷாம் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஸ்டெர்லிங் ரோட்டில் நடிகர் ஷாமிர்க்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் சட்டவிரோதமாக சீட்டு விளையாட்டு சூதாட்டம் நடப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. நேற்று இரவு காவல்துறையினர் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டில் திடீரென நுழைந்த சோதனைகளை மேற்கொண்டனர்.
இச்சம்பவத்தால் நடிகர் ஷாம் உட்பட 13 பேர் சீட்டு விளையாட்டு சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்தது உறுதியாகியது. எனவே காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து பணம், சீட்டுக்கட்டு போன்றவற்றை பறிமுதல் செய்தனர். பல நாட்களாக அடிக்கடி இங்கு தொழிலதிபர்கள் நடிகர்கள் இயக்குனர்கள் என பலர் இதுபோன்று சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நடிகர் ஷாம் அடுக்குமாடி குடியிருப்பு வீட்டை சூதாட்ட கிளப் போல நடத்தியிருந்தது தெரியவந்துள்ளது.