Categories
உலக செய்திகள்

இலங்கையை தொடர்ந்து மற்றொரு நாட்டிலும்… வெடித்த போராட்டம்… என்ன நடக்கிறது?…

இலங்கைக்கு அடுத்தபடியாக பனாமா நாட்டிலும் எரிபொருள் வெளியேற்றத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

இலங்கையில் அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் போராட்டம் உச்சகட்டத்தை அடைந்திருக்கும் நிலையில் பனாமா என்னும் மத்திய அமெரிக்க நாட்டிலும் விலை ஏற்றத்திற்கு எதிராக ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். அங்கு உணவு பொருட்கள், எரிபொருட்களின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று அரசாங்கத்தை வலியுறுத்தி வருகிறார்கள்.

ஆனால் அங்கு ஆர்ப்பாட்டம், இசை முழக்கங்கள் மற்றும் ஆடல்கள் பாடல்கள் என்று வித்தியாசமான முறையில் நடக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா மேற்கொண்டுள்ள போர் காரணமாக உலக நாடுகளில் எரிபொருள் விலை அதிகரித்திருக்கிறது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்த்தப்பட்டு ஒவ்வொரு நாளும் வாழ்க்கையை ஓட்டுவதற்கு மக்கள் திண்டாடி வருகிறார்கள்.

அதில், பனாமா நாட்டில் வருங்கால சமுதாயத்தை சிறப்பாக அமைக்கக்கூடிய ஆசிரியர்கள்  முன்னிலையில் நின்று போராட்டத்தை நடத்துகிறார்கள். அவர்களின் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பல தரப்பு மக்களும் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். நிலைமை மோசமடையாமல் இருப்பதற்காக அரசாங்கம் ஆர்ப்பாட்டக்காரர்களை பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்திருக்கிறது. அந்நாட்டின் அதிபரான லாரன்டினோ கார்டிசோ, எரிபொருள் விலையை குறைக்க உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்.

Categories

Tech |