பண மோசடி செய்ததாக கூறி சூப்பிரண்டு சக்தி கணேசனிடம் 28 பெண்கள் மனு அளித்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள கல்குணம் பகுதியில் விஜயலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் விஜயலட்சுமி உள்பட 28 பெண்கள் சூப்பிரண்டு சக்தி கணேசனிடம் புகார் மனு ஒன்று அளித்துள்ளனர். அதில் குமரன் நகரில் இயங்கி வருகின்ற தனியார் நிறுவனத்தின் நிர்வாகி வெற்றிசெல்வன் மற்றும் பவானி, தமிழ்ச்செல்வம் ஆகியோர் தங்கள் நிறுவனத்தில் பத்தாயிரம் ரூபாய் செலுத்தி உறுப்பினராக சேர்ந்து மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பளம் மற்றும் போனசாக மளிகை பொருட்கள் வழங்கப்படும் என விளம்பரப்படுத்தி இருந்தனர்.
அதை நம்பி நாங்கள் 29 பேரும் 5,89,240 ரூபாய் வரை செலுத்தினோம். ஆனால் பணத்தை வாங்கிக்கொண்டு அவர்கள் தங்களுக்கு தர வேண்டிய பணத்தை கொடுக்காமல் இருந்து வந்தனர். இது பற்றி நாங்கள் கேட்டதற்கு எங்களை ஆபாசமாக திட்டி, கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அந்த நிறுவனத்தை மூடி விட்டு தலைமறைவாகி விட்டனர். அதனால் அவர்களை கைது செய்து தங்களது பணத்தை மீட்டுத்தர வேண்டும் என கூறியுள்ளனர்.
இதனையடுத்து மனுவைப் பெற்றுக் கொண்ட காவல்துறை சூப்பிரண்டு சக்தி கணேசன் மனு மீது வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் பவானி, தமிழ்ச்செல்வன் மற்றும் வெற்றிச்செல்வன் ஆகிய 3 பேரையும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து வெற்றி செல்வனை கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக இருக்கும் தமிழ்ச்செல்வன் மற்றும் பவானி ஆகியோரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.