பணமோசடி செய்த ஊராட்சி மன்ற தலைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பாச்சிக்கோட்டை பகுதியில் ஊராட்சி மன்றத் தலைவரான பன்னீர்செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் பன்னீர்செல்வம் மீது பணமோசடி வழக்குகள் நிலுவையில் இருந்துள்ளன. இதனையடுத்து பன்னீர்செல்வம் கோவை மாவட்டத்தில் வசிக்கும் டாக்டர் மாதேஸ்வரன் என்பவரிடம் மருத்துவமனை கட்டுவதற்கு கடன் வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்துள்ளார். இதுகுறித்த வழக்கில் பன்னீர்செல்வத்தை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்நிலையில் பன்னீர்செல்வம் மீது துவாக்குடி பகுதியில் வசிக்கும் மரவியாபாரியான தினேஷ் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில் தினேஷ் கூறியதாவது தன்னிடம் கார் வாங்குவதற்காக வங்கியில் கடன் வாங்கி தருவதாக கூறி பன்னீர்செல்வம் ஒரு கோடியே 33 லட்ச ரூபாய் பணம் மோசடி செய்துள்ளார். இதுகுறித்து பன்னீர்செல்வம் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால் ஏற்கனவே கோவை காவல்துறையினரால் பன்னீர்செல்வம் கைது செய்யப்பட்டபட்டுள்ளார். இதற்கிடையில் புதுக்கோட்டை குற்றப்பிரிவு காவல்துறையினர் பன்னீர் செல்வத்தை வங்கியில் கடன் வாங்கி தருவதாக கூறிய வழக்கில் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் காவல் துறையினர் பன்னீர்செல்வத்தின் வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை செய்த போது பல முக்கிய ஆவணங்கள் கிடைத்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.