Categories
சினிமா தமிழ் சினிமா

பணப்பெட்டியுடன் பிக்பாஸிலிருந்து வெளியேறிய கேபி… வெளியிட்ட முதல் பதிவு…!!!

பிக்பாஸிலிருந்து பணப் பெட்டியுடன் வெளியேறிய கேபி முதல் பதிவை வெளியிட்டுள்ளார் .

பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் வெற்றிகரமாக இறுதிகட்டத்தை எட்டியுள்ளது . ஒவ்வொரு சீசனிலும் கடைசி நேரத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையுடன் போட்டியிலிருந்து விலக போட்டியாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் . கடந்த சீசனில் கவின் பிக்பாஸ் கொடுத்த தொகையை பெற்றுக்கொண்டு போட்டியில் இருந்து விலகி வெளியேறினார் . இந்த சீசனிலும் போட்டியாளர்களுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. இதில் 5 லட்சம் பணத் தொகையைப் பெற்றுக் கொண்டு கேபி பிக்பாஸ் போட்டியில் இருந்து விலகி வெளியேறினார் .

gaby first live after eviction பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கேபி வெளியிட்ட முதல் பதிவு

கேபி  பெட்டியை எடுத்தபோது தடுக்க முயற்சித்த ரியோவிடம் ‘எனக்கு அம்மா மட்டும் தானடா’ என அவர் கூறிய வார்த்தை நெகிழ்ச்சியடைய செய்தது . இந்நிலையில் பிக்பாஸில் இருந்து வெளியேறிய பின் முதல் முறையாக கேபி ரசிகர்களிடம் லைவில் உரையாடியுள்ளார் . அதில் கேபி தனது நன்றியை ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார் . மேலும் ரசிகர் ஒருவர் உங்களுக்கு பாலாவை பிடிக்குமா ? என்று கேட்ட கேள்விக்கு ‘நிச்சயமாக எனக்கு பாலாவை பிடிக்கும். நீங்கள் எனக்கு கொடுத்த அன்பை மனதில் வைத்து நான் மென்மேலும் முன்னேறுவேன். பிக்பாஸ் வீட்டை மிகவும் மிஸ் செய்கிறேன்’ என்று கேபி  பதிலளித்துள்ளார்.

Categories

Tech |