Categories
சினிமா தமிழ் சினிமா

பணப் பெட்டியுடன் வெளியேறிய போட்டியாளர் இவர்தான்… வெளியான மூன்றாம் புரோமோ…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனிலும் இறுதி நேரத்தில் பிக் பாஸ் வீட்டுக்குள் பணப்பெட்டி அனுப்பப்படும். அந்த குறிப்பிட்ட தொகையை பெற்றுக் கொள்ளும் போட்டியாளர் போட்டியில் இருந்து விலகி வெளியேறிவிட வேண்டும் . கடந்த சீசனில் இறுதி நேரத்தில் கவின் பணப்பெட்டியுடன் போட்டியிலிருந்து வெளியேறினார்.  அந்த வாய்ப்பு இந்த சீசன் போட்டியாளர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. இன்று வெளியான இரண்டாவது புரோமோவில்  இறுதிப் போட்டியாளர்களுக்கு பணப்பெட்டி அனுப்பப்படுகிறது ‌.

பிக்பாஸ் அனுப்பிய லெட்டரை வாசித்த அர்ச்சனா ‘ஒவ்வொரு பஸருக்கும் நிர்ணயிக்கப்பட்ட தொகையை எடுக்காவிட்டால் அடுத்த பஸருக்கான தொகை அனுப்பப்படும். இந்த தொகையை உங்களில் யாராவது ஒருவர் எடுக்க முடிவு செய்தால் நீங்கள் அதை எடுத்துக்கொண்டு இந்த வீட்டில் இருந்து வெளியேறலாம்’ என்று கூறுகிறார். இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது புரோமோவில் பணப்பெட்டியை கையில் எடுத்துக்கொண்டு கேபி வெளியேறுகிறார். இதனால் மற்ற போட்டியாளர்கள் சற்று பதற்றம் அடைகின்றனர் .

Categories

Tech |