Categories
சினிமா தமிழ் சினிமா

பணப் பெட்டியுடன் வெளியேறியது ஏன் ?… கமலின் கேள்விக்கு பதிலளித்த கேபி…!!!

பிக்பாஸில் இருந்து பண பெட்டியுடன் வெளியேறிய காரணத்தை கேபி கூறியுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி இன்று நடைபெற உள்ளது . 16 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியின் ஒவ்வொரு வார இறுதியிலும் மக்களின் குறைவான வாக்குகளைப் பெற்ற போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டனர் . இறுதியாக ஆறு போட்டியாளர்கள் இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர் . இதையடுத்து பிக்பாஸ் போட்டியில் இருந்து பண பெட்டியுடன் வெளியேறும் வாய்ப்பை கேபி பயன்படுத்திக் கொண்டார் ‌. நேற்றைய எபிசோடில் கமலை சந்திக்க கேபி வந்திருந்தார் . சேலையில் வந்த கேபியை பார்த்து ஆச்சரியமடைந்த கமல் அழகாக இருப்பதாக பாராட்டினார்.

மேலும் பணப் பெட்டியை எடுத்துக்கொண்டு போட்டியிலிருந்து விலகியதன் காரணத்தை கேட்டார். இதற்கு கேபி ‘என் மனதில் பணப்பெட்டி வந்தவுடன் அதை எடுத்துவிட வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. குடும்பத்திற்காக ஏதாவது செய்யணும்னு தோணுச்சு அதற்காக அதை எடுத்துக்கொண்டேன்.’ என்று கூறுகிறார். இதையடுத்து பேசிய கமல் இந்த நிகழ்ச்சியை பொறுத்தவரை நீங்கள் பணப்  பெட்டியுடன் வெளியேறியது ஸ்மார்ட் மூவ் தான் என பாராட்டுகிறார். பின்னர் கமல் கேபியை எதிர்காலத்திலும் நேரத்திற்கு தகுந்தவாறு முடிவெடுக்க வாழ்த்தினார்.

Categories

Tech |