உரிய ஆவணம் இன்றி 80 ஆயிரம் ரூபாய் எடுத்து வந்ததை கண்டுபிடித்து அலுவலரிடம் ஒப்படைத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சந்தைப்பேட்டை புறவழிச்சாலையில் திருக்கோவிலூர் சிறப்பு தாசில்தார் கண்ணன் தலைமையில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது அவ்வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்த போது 80 ஆயிரம் ரூபாய் பணத்தை உரிய ஆவணம் இன்றி ராஜு என்பவர் எடுத்து வந்தது அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது. அதன்பின் அந்த பணத்தை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அய்யூப்பிடம் அதிகாரிகள் ஒப்படைத்துள்ளனர்.