தொழிற்சாலையில் பணத்தை திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில் பிராங்கிளின் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வினோத் என்ற மகன் உள்ளார். இவர் பழவூர் பகுதியில் தும்பு தொழிற்சாலை நடத்தி வருகிறார். அவரிடம் கூடங்குளம் பகுதியில் வசிக்கும் இசக்கி முத்துவின் மகனான பொன்இசக்கி என்பவர் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் வினோத் தொழிற்சாலையில் வேலை பார்ப்பவர்களுக்கு சம்பளம் கொடுக்க ரூ.21 ஆயிரத்து 500 பணத்தை தனது மேஜையில் வைத்துள்ளார்.
அதனை பொன் இசக்கி நைசாக திருடியுள்ளார். இதுகுறித்து வினோத் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். அதில் பொன் இசக்கி மேஜையில் வைத்திருந்த ரூ.21 ஆயிரம் 500 பணத்தை நைசாக எடுத்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் பொன் இசக்கியை கைது செய்ததோடு அவரிடம் இருந்து பணத்தையும் மீட்டுள்ளனர். மேலும் பொன் இசக்கி மீது காவல் நிலையத்தில் 10 திருட்டு வழக்குகள் இருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.