Categories
உலக செய்திகள்

பள்ளி மாணவர்கள் கடத்தல்…. பணம் கேட்டு மிரட்டிய பயங்கரவாதிகள்…. நம்பிக்கை தெரிவித்துள்ள ஹயப்….!!

 பணத்திற்காக பள்ளி மாணவர்களை பயங்கரவாதிகள் கடத்திச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் பள்ளி மாணவர்களை கடத்திச் சென்று அவர்களின் பெற்றோர்களிடம் பணம் கேட்டு மிரட்டுவது அங்குள்ள பயங்கரவாதிகளின் வழக்கமாகிவிட்டது. இதனை அடுத்து அந்நாட்டின் வடமேற்கு பகுதியில் இருக்கும் பள்ளி ஒன்றில் மாணவர்களை பயங்கரவாதிகள் துப்பாக்கி முனையில் கடந்த மாதம் 5 ஆம் தேதி கடத்தி சென்றுள்ளனர்.  அவர்கள் மொத்தம் 126 மாணவர்களை கடத்தி பணய கைதிகளாக வைத்துள்ளனர். ஒவ்வொரு மாணவருக்கும் சுமார் 10 லட்சம் வீதம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

ஆனால் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி சோதனையில் 28 மாணவர்கள் மட்டும் விடுவிக்கப்பட்டனர். சிலர் தப்பி ஓடி வந்தனர். இருப்பினும் பணயத் தொகையை கொடுக்காததால் மீதமிருந்த மாணவர்களை வேறு இடத்திற்கு மாற்றியுள்ளனர். இந்த நிலையில் 15 மாணவர்களின் பெற்றோர்கள் பணய தொகையை கொடுத்ததால் அவர்களை நேற்று பயங்கரவாதிகள் விடுவித்துள்ளனர். மேலும் மீதமுள்ளவர்களை பயங்கரவாதிகள் தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளனர்.

குறிப்பாக கடந்த ஆண்டு டிசம்பர் முதல் நைஜீரியாவில் பணத்திற்காக 1000த்திற்கும் மேலான பள்ளி மாணவர்கள் கடத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கடத்தல் சம்பவத்தில் இதுவரை 56 மாணவர்கள் பயங்கரவாதிகளிடமிருந்து தப்பியோ அல்லது அவர்களினால் விடுதலை செய்யப்பட்டோ உள்ளனர். இன்னும் 65 மாணவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று நம்புகிறோம் என்று உள்ளூர் கிறிஸ்தவ ஆலய தலைவர் ஹயப் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |