Categories
தேசிய செய்திகள்

பணத்துக்காக இப்படியா பண்ணனும்?… மனைவியை டார்ச்சர் செய்த கணவர்…. விசித்திரமான விவாகரத்து வழக்கு….!!!!

உத்தரப்பிரதேசம் லக்னோ குடும்ப நீதிமன்றத்திற்கு விசித்திரமான விவாகரத்து வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு தொடர்பாக மூத்த வழக்கறிஞர் கூறியிருப்பதாவது, “லக்னோவைச் சேர்ந்த பெண் ஒருவர் தன் கணவருக்கு தெரியாமல் பாலியல் ரீதியிலான வீடியோ கால் மற்றும் சேட்டிங் செய்யும் செயலி வாயிலாக மாதந்தோறும் நல்ல வருவாய் பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் அப்பெண்ணுக்கு செயலி வாயிலாக இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பெண்ணை அரை நிர்வாணத்துடன் வீடியோ கால் செய்யும்படி இளைஞர் கேட்டு உள்ளார். அதன்படி அந்த பெண்ணும் அரை நிர்வாணமாக வீடியோ கால் செய்து உள்ளார். அதனை பதிவு செய்த இளைஞர், பெண்ணிடம் பணம் கேட்டு மிரட்டி இருக்கிறார்.

அவ்வாறு பணம் தராவிட்டால் அவருடைய கணவருக்கு வீடியோவை அனுப்பி விடுவதாக இளைஞர் மிரட்டி இருக்கிறார். எனினும் இளைஞரின் மிரட்டலை அப்பெண் அவ்வளவாக  பொருட்படுத்தவில்லை. இதன் காரணமாக ஆத்திரமடைந்த இளைஞர் அப்பெண்ணின் கணவருக்கு வீடியோக்களை பகிர்ந்துள்ளார். அதை பார்த்த கணவர் கோபப்படாமல் இதேபோல் பலருடன் வீடியோ கால் வாயிலாக பணம் சம்பாதித்து தரும்படி பெண்ணை துன்புறுத்தியுள்ளார். அத்துடன் தனது வங்கிக்கணக்குகளை கணவர் முடக்கியதாகவும், அவரது நண்பர்கள் உடன் படுக்கையைப் பகிர்ந்துகொள்ளுமாறு மிரட்டி துன்புறுத்தியதாகவும் அப்பெண் கூறியுள்ளார். இதன் காரணமாக கணவரிடமிருந்து விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதே சமயம் விவகாரத்து வழங்க கணவர் மறுத்துவரும் நிலையில், வழக்கு நிலுவையில் இருப்பதாக வழக்கறிஞர் தெரிவித்தார்.

Categories

Tech |