Categories
உலக செய்திகள்

ஒரு கிலோ வாழைப்பழம் 3,336 ரூபாயா…? பஞ்சத்தில் வாடித் தவிக்கும் வடகொரியா…. உண்மையை ஒப்புக் கொண்ட தலைவர் கிம் ஜாங் உன்….!!

வடகொரியாவில் உணவுப் பொருட்களுக்கு பற்றாக்குறை நிலவி வருவதால் அந்நாட்டு மக்கள் இரு வேளை உணவு மட்டுமே சாப்பிடுவதாக தலைவர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார்.

வடகொரியா எரிபொருட்கள், உணவு மற்றும் உரத்திற்கு சீன நாட்டுடனான வர்த்தகத்தையே சார்ந்துள்ளது. ஆனால் வடகொரியா தற்போது நிலவி வரும் கொரோனா தொற்று பரவலின் காரணத்தால் அந்நாட்டின் எல்லையை மூடியுள்ளது. இந்நிலையில் வட கொரியாவில் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அந்நாட்டின் பொதுமக்கள் தினமும் 2 வேளை மட்டுமே உணவு சாப்பிடுவதாக தகவல் கிடைத்துள்ளது.

இதற்கிடையே கடந்தாண்டு வடகொரியாவில் வெள்ளம், சூறாவளி போன்ற இயற்கை சீற்றங்கள் மிகவும் அதிகமாக இருந்துள்ளது. இதனால் உணவுப் பொருட்களின் உற்பத்தி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதெல்லாம் ஒன்று சேர்ந்தே தற்போது வட கொரியா நாட்டில் உணவுப் பொருட்களுக்கு பஞ்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக அந்நாட்டின் தலைவரான கிம் ஜாங் உன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இதனையடுத்து வடகொரியாவில் ஒரு கிலோ வாழைப்பழத்தின் விலை ரூபாய் 3,336 ஆகும். மேலும் ஒரு காபி 7,381 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இவ்வாறு பல பொருட்களினுடைய விலை மிகவும் கடுமையாக உயர்ந்துள்ளது.

Categories

Tech |