எருமைப்பட்டி அருகே இருக்கும் ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள எருமப்பட்டி அருகே இருக்கும் ரெட்டிபட்டி ஊராட்சி கூலிபட்டி கிராமத்தில் இருக்கும் அங்கன்வாடி மையம் மற்றும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது குழந்தைகளுக்கு விளையாட்டுடன் கூடிய கல்வி கற்கும் வகையிலான விளையாட்டு பொருட்கள் தேவையான அளவு இருப்பதையும் குழந்தைகள் அந்த உபகரணங்களை பயன்படுத்தி விளையாடியதையும் பார்வையிட்டார். இதன் பின் குழந்தைகளுடன் உரையாடினார்.
பின்னர் சுவரில் வரையப்பட்டிருக்கும் விலங்குகள் மற்றும் பறவைகளின் பெயர்கள் குறித்து குழந்தைகளை கூறச் சொல்லி சரியாக சொன்ன குழந்தைகளுக்கு பாராட்டுகளையும் அந்த பறவைகள் விலங்குகளின் பெயரை குழந்தைகளிடம் ஆட்சியர் கூறினார். இதன்பின் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட போது மாணவ-மாணவிகளின் கற்றல் திறனை சோதிக்க புத்தகங்களை வாசிக்க சொன்னார். சரியாக உச்சரிக்கவும் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்தார். மாணவர்களின் கற்றல் திறன் நன்றாக இருப்பதை உறுதி செய்த ஆட்சியர் ஆசிரியர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.