பஞ்சாயத்து யூனியன் அலுவலக அதிகாரி திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள நன்னகரம் பகுதியில் ராதாகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாப்பாக்குடி யூனியன் அலுவலகத்தில் பணி மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு உஷா சுப்புலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு வட்சன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் ராதாகிருஷ்ணன் முக்கூடலில் ஒரு வாடகை வீட்டில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இதனையடுத்து ராதாகிருஷ்ணன் பாப்பாக்குடி யூனியன் அலுவலகத்திற்கு வழக்கம் போல் வேலைக்கு சென்றுள்ளார்.
அதன்பின் ராதாகிருஷ்ணன் யூனியன் அலுவலக மாடியில் உள்ள தனது அறைக்கு சென்று அமர்ந்துள்ளார். இதனையடுத்து சிறிது நேரத்தில் ராதாகிருஷ்ணன் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள் விரைந்து சென்று ராதாகிருஷ்ணனை உடனடியாக மீட்டு முக்கூடல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ராதாகிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சக ஊழியர்கள் முக்கூடல் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற முக்கூடல் காவல்துறையினர் ராதாகிருஷ்ணனின் சடலத்தை கைப்பற்றி பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சேரன்மகாதேவி காவல்துறையினர் பாப்பாக்குடி யூனியன் அலுவலகத்திற்கு சென்று அங்கு வேலை பார்க்கும் ஊழியர்களிடம் ராதாகிருஷ்ணன் பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.