Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பஞ்சு குடோனில் தீ விபத்து…. தீயணைப்புத் துறையினரின் முயற்சி…. ஈரோட்டில் பரபரப்பு….!!

பஞ்சு குடோனில் திடீரென தீ பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்திலுள்ள கந்தாம்பாளையம் பிரிவு அருகில் கழிவு பஞ்சுகளை அரைக்கும் குடோன் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த குடோனில் 3 ஷிப்டுகளாக தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அதன்படி தொழிலாளர்கள் 10 பேர் இரவு 1 மணி அளவில் பணிபுரிந்து கொண்டிருக்கும்போது திடீரென குடோனில் வைக்கப்பட்டிருந்த கழிவு பஞ்சுகள் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதனை பார்த்த தொழிலாளர்கள் பஞ்சு மீது எரிந்த தீயை தண்ணீரை ஊற்றி அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் அவர்களால் அணைக்க முடியவில்லை.

இதுகுறித்து தகவலறிந்த பெருந்துறையின் தீயணைப்புதுறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைப்பதற்கு முயற்சி செய்தனர். ஆனால் தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் அவர்களாலும் சரிவர அணைக்க முடியவில்லை. மேலும் இதுகுறித்து தகவலறிந்த ஈரோடு தீயணைப்புத்துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இதனைத்தொடர்ந்து இரு தீயணைப்புத்துறை வீரர்கள் இணைந்து குடோனில் எரிந்த தீயை முற்றிலுமாக அணைத்தனர். இவ்வாறு சுமார் 4 மணிநேர போராட்டத்திற்கு பிறகு குடோனில் எரிந்த தீ அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தானது பஞ்சு அரவை எந்திரம் சூடாகியதனால் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |