சீன அரசு, உலக கோப்பை கால்பந்து போட்டி நடக்கும் கத்தாருக்கு பாண்டா கரடிகளை பரிசாக வழங்கியுள்ளது.
கத்தார் நாட்டில் தான் இந்த தடவை உலக கோப்பை கால்பந்து போட்டி நடக்கவிருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், இந்த தொடரில் சீனா தகுதி பெற முடியவில்லை. எனினும் சீனாவிற்கும் கத்தார் நாட்டிற்கும் இடையே நல்ல நட்புறவு இருக்கிறது.
எனவே, தங்களின் நட்புறவை வெளிக்காட்டும் வகையில், சீனா பாண்டா ஜோடியை பரிசாக கத்தார் நாட்டிற்கு அனுப்பி வைத்திருக்கிறது. அதன்படி, முதல் தடவையாக மத்திய-கிழக்கு நாடுகளுக்கு பாண்டாக்கள் வந்திருக்கிறது.