Categories
உலக செய்திகள்

‘சாப்பிட மூங்கில் இல்லைங்கோ…’ சீனாவுக்கு பேக்கிங் ஆகும் பாண்டா கரடிகள்!

கனடாவில் மூங்கில் பற்றாக்குறை உள்ளதால், இரண்டு பெரிய சைஸ் பாண்டா கரடிகளை சீனாவிற்கு திருப்பி அனுப்பத் திட்டமிட்டுள்ளனர்.

கரோனா அச்சுறுத்தலால் கனடாவில் உள்ள கல்கரி வன உயிரியல் பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இத்தருணத்தில் பூங்காவில் உள்ள வனவிலங்குகளை பூங்கா காப்பாளர்கள் பாதுகாப்புடன் பராமரித்து வருகின்றனர். விலங்குகளுக்குத் தேவையான உணவுகளையும் சரியான நேரத்தில் வழங்கி வருகின்றனர். ஆனால், பூங்காவில் உள்ள இரண்டு பாண்டா கரடிகளுக்குத் தேவையான மூங்கில் ஆனது கிடைக்காததால் காப்பாளர்கள் செய்வதறியாது திகைத்துள்ளனர்.

வழக்கமாக பாண்டாவுக்குத் தேவையான மூங்கிலானது சீனாவுக்கும் கல்கரிக்கும் இடையிலான நேரடி விமானத்தில் கொண்டு வரப்படும். ஆனால், கரோனா அச்சத்தால் விமான சேவை குறைக்கப்பட்டுள்ளதால், மூங்கில் கொண்டு வர முடியாத சூழ்நிலை கல்கரியில் உள்ளது. புதிய மூங்கில் விற்பனையாளர்களைத் தேடிய பூங்கா நிர்வாகத்துக்கும் சோகம் தான் மிஞ்சியது.

இதைத் தொடர்ந்து, கல்கரி வன உயிரியல் பூங்காவில் உள்ள எர் ஷுன் (Er Shun),டா மாவோ(Da Mao) ஆகிய இரண்டு பெரிய சைஸ் பாண்டா கரடிகளை மீண்டும் சீனாவிற்கு திருப்பி அனுப்ப முடிவு செய்துள்ளனர். இந்தப் பாண்டா கரடிகள், கல்கரி பூங்காவிற்கு 10 ஆண்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் சீனாவிலிருந்து கொண்டு வரப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |