Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பண்டைய கால பயன்பாடு… கண்டெடுக்கப்பட்ட16 தாழிகள்… ஆராய்ச்சியாளர்களின் எதிர்பார்ப்பு…!!

அகழாய்வின்போது ஒரே குழியில் பண்டைய காலத்தில் வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய 16 தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சிவகளை பகுதியில் தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றது. இதில் பண்டைய காலத்தில் வசித்த தமிழர்கள் நாகரிகத்துடன் வாழ்ந்தார்கள் என்பதை விளக்கும் வகையில் பல்வேறு பொருட்களை அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். அதில் பண்டைய காலத்தில் வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய தாழிகள், மண் பானைகள், கிண்ணங்கள், இரும்பு, மண்பாண்ட பொருட்கள் மற்றும் பானை ஓடுகள் ஆகியவற்றை கண்டுபிடித்துள்ளனர். அந்த பொருட்களின் மீது தமிழ் பிராமி எழுத்துக்கள், குறியீடுகள் மற்றும் கீறல்கள் போன்றவைகள் இருப்பதையும் கண்டறிந்துள்ளனர்.

இந்நிலையில் தொல்லியல் துறை இயக்குனர் பிரபாகரன் தலைமையில் குழுவினர்கள் தற்போது இரண்டாவது கட்டமாக அகழாய்வு பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த அகழாய்வு பணியின்போது ஒரே குழியில் பண்டைய காலத்தில் வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய 16 தாழிகள் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். அந்தத் தாழிகள் 2 அடி முதல் 4 அடி உயரம் உள்ளது எனவும் அவற்றில் 5 தாழிகள் மூடியுடன் உடையாமலும் இருக்கின்றது எனவும் தொல்லியல் துறை அதிகாரி தெரிவித்துள்ளார். இதனையடுத்து அதே குழியில் சில பானை ஓடுகளும் அதன்மீது தமிழ் பிராமி எழுத்துக்கள் எழுதி இருக்கின்றது எனவும் தெரிவித்துள்ளனர்.

இதுவரையிலும் அப்பகுதியில் நடைபெற்ற அகழ்வாய்வு பணியின்போது இன்று வரை 40 தாழிகள் கண்டறியப்பட்டுள்ளது. எனவே தொல்லியல் துறை அதிகாரி இந்த 16 தாழிகளையும் சீக்கிரமாக திறந்து ஆய்வு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். இதனால் அப்பகுதியில் பண்டைய கால தமிழர்கள் பயன்படுத்திய பொருட்கள் இன்னும் அதிகம் கிடைக்க வாய்ப்புள்ளதாக  அதிகாரி தெரிவித்துள்ளார்.

Categories

Tech |