அகழ்வாராய்ச்சியின் போது 4 பாசி மணிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்திலுள்ள கீழடி பகுதியில் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றது. இது பண்டைய காலத்தில் வாழ்ந்த தமிழர்கள் நாகரிகத்துடன் வாழ்ந்தார்கள் என்பதை உலகிற்கு எடுத்துக்காட்டாக விளங்கி வருகின்றது. இங்கு ஏழாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணி தற்போது நடைபெற்று வருகின்றது. இந்த பணியில் ஏராளமான பொருட்கள் கிடைத்துள்ளது.
இந்நிலையில் கீழடியில் அகழாய்வு பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது நான்கு பாசி மணிகள் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தப் பாசி மணிகளில் ஒன்று சிவப்பு நிறத்திலும், மூன்று பச்சை நிறத்திலும் உள்ளது என அகழ்வாய்வு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அகலாய்வு பணிகள் தொடர்ந்து நடைபெறுவதால் இன்னும் அதிகமான பொருட்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக அகழ்வாராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.