சீனா தங்கள் நாட்டிற்கு வழங்கிய பாண்டா ஜோடிகளை ராஜ மரியாதையுடன் கத்தார் அரசு வரவேற்றிருக்கிறது.
கத்தாரில் 22 ஆம் பிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி அடுத்த மாதம் 20ஆம் தேதி அன்று ஆரம்பமாகிறது. இதற்காக தீவிர ஏற்பாடுகள் நடக்கிறது. இந்நிலையில் தங்கள் நட்பு நாடான கத்தாருக்கு உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்காக சீன அரசு அன்பளிப்பு ஒன்றை அனுப்பி இருக்கிறது.
அதாவது ஒரு ஜோடி பாண்டா கரடிகளை கத்தாருக்கு பரிசாக வழங்கியிருக்கிறது. கத்தார் அரசாங்கம், சீனா தங்களுக்கு வழங்கிய பாண்டா கரடிகளை அரச மரியாதையுடன் வரவேற்றுள்ளது. சீன நாட்டின் சிச்சுவான் மாகாணத்தில் அமைந்துள்ள அடர்த்தியான காடுகளில் மட்டுமே இந்த பாண்டாக்கள் காணப்படும்.
குளிர் பிரதேசமாக கத்தார் இருப்பதால், அங்குள்ள தட்பவெட்ப நிலையை பாண்டாக்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே, கத்தார் அரசாங்கம் பாண்டாக்களுக்கு ஏற்ற வகையில் சிறப்பான காலநிலையை உருவாக்கியுள்ளது. இது மட்டுமல்லாமல் அவற்றிற்கு வாரந்தோறும் ஏறக்குறைய 800 கிலோ கிராம் மூங்கில் உணவாக கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. கத்தார் நாட்டிற்கு முதல் தடவையாக பாண்டா கரடிகள் வருகை தந்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.