Categories
சினிமா தமிழ் சினிமா பேட்டி

எப்போ கல்யாணம் பண்ணப் போறீங்க?… பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை சொன்ன பதில்… அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்!

யாரெல்லாம் காதலை சொல்ல நினைக்கிறீங்களோ அவங்க என்னிடம் சொல்லலாம் என்று பிரபல சீரியல் நடிகை சித்ரா தெரிவித்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகை சித்ரா.. விஜே வாக மீடியாவில் தனது பயணத்தை தொடங்கிய சித்ரா தற்போது சின்னத்திரை நடிகையாக அசத்தி வருகிறார்.

நடிகை, தொகுப்பாளினி, டான்ஸர் மற்றும் மாடலிங் என பன்முகத்திறமை கொண்ட சித்ரா, எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பார். இந்த நிலையில் சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றில், நீங்கள் எப்பொழுது கல்யாணம் பண்ணப் போறீங்க? அப்படி கல்யாணம் பண்ணினால் அது பெற்றோர்களால்  நிச்சயிக்கப்பட்ட திருமணமா? அல்லது காதல் திருமணமா? என கேள்வி கேட்டுள்ளனர்.

இதற்கு சற்றும் யோசிக்காமல் பதிலளித்த சித்ரா, எனது திருமணத்திற்கு இன்னும் 2 வருடங்கள் இருக்கின்றது. அதற்குள் யாரெல்லாம் காதலை சொல்ல நினைக்கிறார்களோ, அவர்களெல்லாம் சொல்லலாம் என்று கூறினார்.. சித்ராவின் இந்த பதில் அவரது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..

Categories

Tech |