விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர் சீரியல் பரபரப்பான திருப்பங்களுடன் ஒளிப்பரப்பாக உள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் தொடர் கதையானது முன்னணி சீரியல்களின் பட்டியலில் உள்ளது. இந்த தொடர்கதை அண்ணன் தம்பிகளின் பாசத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு என ரசிகர்கள் கூட்டமே உள்ளது. இந்த தொடரில் மூன்று பேருக்கு திருமணமான நிலையில் நான்காவது பையனான கண்ணன் மட்டும் கல்லூரியில் படித்து வருகிறான். இதனை அடுத்து உறவுக்கார பெண்ணான ஐஸ்வர்யாவுடன் கண்ணனுக்கு காதல் மலர்கிறது.
ஆனால் இதற்கிடையில் ஐஸ்வர்யாவுக்கு வீட்டில் வேறொரு பையனான பிரசாந்துடன் திருமண நிச்சியதார்த்தம் நடைபெறுகிறது. இந்த நிலையில் கண்ணனும் ஐஸ்வர்யாவும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்ய முடிவு எடுத்துள்ளனர். மேலும் கண்ணன் ஐஸ்வர்யா கழுத்தில் தாலி கட்டுவது போன்று புரோமோ வெளியாகியுள்ளது.