Categories
சினிமா தமிழ் சினிமா

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை சன் டிவியில் நடித்துள்ளாரா… வெளியான புதிய தகவல்….!!!

பாண்டியன் ஸ்டோர் பிரபலம் மீனா இதற்கு முன்னதாக சன் டிவி சீரியலில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் தற்போது நம்பர் ஒன் சீரியலாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் பாண்டியன் ஸ்டோர். இந்த சீரியலில் நடித்து வரும் அனைவரது கதாபாத்திரமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்தவகையில் இந்த சீரியலில் மீனா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஹேமாவின் நடிப்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இவர் சீரியல் நடிப்பது மட்டுமின்றி யூடியூபில் தனக்கென ஒரு சேனலை தொடங்கி அதில் தனது வீடியோக்களை பதிவு செய்து வருகிறார். இந்நிலையில் ஹேமா விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிப்பதற்கு முன்னதாகவே மற்றொரு பிரபல தொலைக்காட்சி சேனலான சன் டிவியில் ஒளிபரப்பான பொன்னூஞ்சல் என்னும் சீரியலில் நடித்துள்ளார் என தெரியவந்துள்ளது.

Categories

Tech |