விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பிரபலமானது பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் லட்சுமி அம்மா கதாபாத்திரத்தில் ஷீலா என்பவர் நடித்து வருகிறார். கடந்த எபிசோடுகளில் இவர் உயிரிழந்து இறுதி சடங்கு நடப்பது போன்ற காட்சிகள் ஒளிபரப்பப்பட்டது. ஒருவர் உயிரிழந்தால் செய்யும் அனைத்து சடங்குகளையும் அந்த சீரியலில் ஷீலா அவர்களுக்கு செய்தனர். இவை அனைத்திலும் லக்ஷ்மி அம்மா கதாபாத்திரத்தில் இருந்த ஷீலா எதார்த்தமாக நடித்திருந்தார்.
இதனிடையே பாடையில் லக்ஷ்மி அம்மாவை படுக்க வைத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குழு அவரை முழுவதுமாக பாடையில் வைத்து தூக்கி செல்ல முடியாது என்பதால் அவரைப் போன்று டம்மி ஒன்றை உருவாக்கினர். இதை அதே சீரியலில் நடிக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா யூடியுப் வீடியோவில் கூறியிருந்தார். இந்நிலையில் லக்ஷ்மி அம்மா பாடையில் படுக்கும் காட்சிகளில் நடித்ததால் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் அவருக்கு பூசணிக்காய், எலுமிச்சை பழம் மற்றும் தேங்காய் போன்றவற்றை வைத்து திருஷ்டி சுத்தி போட்டுள்ளது. இதுதொடர்பான புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.