பாண்டியன் ஸ்டோர் சீரியல் இருந்து விலகிய நடிகை வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அண்ணன் தம்பி பாசம், கூட்டுக் குடும்ப வாழ்க்கையை மையமாக வைத்து இந்த சீரியலின் கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சீரியலில் நடித்து வரும் ஒவ்வொரு நடிகர் , நடிகைக்கும் தனித் தனி ரசிகர்கள் உள்ளனர். இந்த சீரியலில் ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் வைஷாலி .
தற்போது இவருக்கு பதிலாக வேறு ஒரு நடிகை அந்த கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து திடீரென விலகியது ஏன் ? என வைசாலியிடம் ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கு விளக்கமளித்த வைஷாலி ‘இதற்கான காரணம் எனக்கே தெரியாது . என்னை ஏன் இந்த சீரியலில் நடிக்க வைக்கவில்லை என தெரியவில்லை’ என்று கூறியுள்ளார்.