பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்க சுஜிதா வாங்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
பாண்டியன் ஸ்டோர் சீரியல் விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று. இந்த சீரியலுக்கென்ற ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இதில் தனம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சுஜிதா.
இந்நிலையில், இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிப்பதற்காக ஒரு நாளைக்கு வாங்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இவர் ஒரு நாளைக்கு 12 ஆயிரம் சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.