Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பண்டிகைக்காக அதிகரித்த பூக்கள் விலை விவசாயிகள் மகிழ்ச்சி….!!!!

ஓசூர் பகுதிகளில் விமர்சையாக கொண்டாடப்படும் வரலட்சுமி நோன்பு பண்டிகைக்காக ஊரடங்கிலும் பூக்களின் விலை அதிகரித்து விற்பனை சூடுபிடித்து இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் தமிழ், தெலுங்கு, கன்னடம் பேச கூடிய மக்கள் அதிகளவில் இருப்பதால் இங்கு வரலட்சுமி நோன்பு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு வரும் வெள்ளிக்கிழமை பண்டிகை கொண்டாட இருப்பதால் பூஜைக்காக பூக்களை வாங்க பொது மக்கள் ஊரடங்கு நேரத்திலும் குவிந்து வருகின்றனர். இன்று கனகாம்பரம் பூ கிலோ 1000 ரூபாய்க்கும்,  குண்டுமல்லி 1 கிலோ 300 ரூபாய்க்கும், ஊசிமணி 280 ரூபாய்க்கும், சாமந்தி பூ 300 ரூபாய்க்கும், அலங்கார பூக்களான டேரா 200 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகின்றன. ஊரடங்கில் வியாபாரமும் விற்பனை இல்லாமலும் இருந்து வந்ததால் தற்போது விற்பனை அதிகரித்து வருவதால் விவசாயிகள் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Categories

Tech |