விஜய் தொலைக்காட்சியின் பிரபல சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலுக்கு என்று தனி ரசிகர் கூட்டம் இருக்கும் நிலையில் சில தினங்களுக்கு முன்பு தனது மூன்று வருட பயணத்தை முடித்து நான்காவது வருடத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் அடி எடுத்து வைத்தது. இந்த வெற்றிக்கு நன்றி கூறும் விதமாக அந்த சீரியலின் நடிகர், நடிகைகள் சமூக வலைதளத்தில் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.
அவ்வகையில் மூர்த்தி கதாபாத்திரத்தில் நடிக்கும் ஸ்டாலின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாண்டியன் ஸ்டோர் சீரியலின் வெற்றிக்கு காரணமாக இருக்கும் சக நடிகர் நடிகைகளுக்கு நன்றி கூறி பதிவிட்டிருந்தார். அதில் சீரியலில் நடிப்பவர்களின் புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தார். ஆனால் அதில் புதிய முல்லையின் புகைப்படம் மட்டுமே இருந்தது. இதனால் வருத்தமடைந்த vj சித்ராவின் ரசிகர்கள் சீரியல் பிரபலமடைய காரணமாக இருந்த சித்துவின் புகைப்படத்தை சேர்த்திருக்கலாமே என்றும் உங்களிடமிருந்து இதை எதிர்பார்க்கவில்லை என்றும் ஸ்டாலினை திட்டி தங்கள் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.