விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த சீரியலில் கதிர் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் குமரன் தங்கராஜன் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் குமரனை ரசிகர்கள் பலரும் வெள்ளி திரைக்கு முயற்சி செய்யுங்கள் கூறி வருகிறார்கள். இந்நிலையில் நடிகர் குமரன் நடிகை கீர்த்தி சுரேஷுடன் இருக்கும் புகைப்படத்தை தற்போது இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.
அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் குமரன் சினிமாவில் நடிப்பதற்கு போய்விட்டாரா என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். அதோடு நடிகை கீர்த்தி சுரேஷுக்கு ஜோடியாக புது படத்தில் நடித்த வருகிறீர்களா என்று கேள்வியும் எழுப்புகிறார்கள். இதனையடுத்து புகைப்படத்தை பகிர்ந்த குமரன் இன்னும் இளமையாகவும் அழகாகவும் என்ற கேப்ஷனோடு நடிகை கீர்த்திக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் நடிகை குமரனும் கீர்த்தி சுரேஷ் சினிமாவுக்கு வரும் முன்பே நண்பர்களாக இருந்துள்ளார்களா எனவும் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.