பன்னீர் – 65
தேவையான பொருட்கள்:
பன்னீர் – 1/2 கிலோ
மைதா மாவு – 4 டேபிள் ஸ்பூன்
சோள மாவு – 8 டேபிள் ஸ்பூன்
அரிசி மாவு – 6 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
கொத்தமல்லி தூள் – 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் – 2 டீஸ்பூன்
சோயா சாஸ் – 2 டேபிள் ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது – 2 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு – 2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் – தேவைக்கு ஏற்ப
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவைக்கு ஏற்ப
செய்முறை:
முதலில் மைதா மாவு, சோள மாவு, அரிசி மாவு ஆகியவற்றை போதுமான அளவு தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ள வேண்டும். பின் மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ளவும். சோயா சாஸ், இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சை சாறு, உப்பு , பன்னீர் துண்டுகள் போட்டு நன்றாக கலந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.கடாயில் எண்ணெய் ஊற்றி கலவையை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு பொன்னிறமாக பொரித்தெடுத்தால் சுவையான பன்னீர் 65 ரெடி!!!