பன்னீர் 65
தேவையான பொருட்கள்
மைதா மாவு – 4 மேசைக்கரண்டி
தயிர் – 2 மேசைக்கரண்டி
வத்தல் பொடி – 2 மேசைக்கரண்டி
எலுமிச்சைச் சாறு – 2 மேசைக்கரண்டி
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
கரம் மசாலா பொடி – 1 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
சோள மாவு – 2 மேசைக் கரண்டி
பன்னீர் – 200 கிராம்
செய்முறை
- முதலில் பனீரை சிறிய துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.
- அகன்ற பாத்திரம் ஒன்றில் சோள மாவு, இஞ்சி பூண்டு விழுது, மைதா மாவு, தயிர், வத்தல் பொடி, கரம் மசாலா பொடி, உப்பு, எலுமிச்சைச் சாறு என அனைத்தையும் ஒன்றாக சேர்த்து இட்லி மாவு பதம் வரும் வரை கரைத்துக்கொள்ளவும்.
- கரைத்து வைத்துள்ள கலவையில் வெட்டி வைத்த பன்னீர் துண்டுகளை முக்கி வைக்கவும்.
- அடுப்பில் கடாயை வைத்து பொறிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் பன்னீர் துண்டுகளை எண்ணெயில் போடவும்.
- ஒருபுறம் வெந்தவுடன் மறுபுறம் திருப்பிப் போடவும். இரண்டு பக்கங்களும் நன்றாக வெந்த பின்னர் எடுத்து விடவும்.
- சுவைமிக்க பன்னீர் 65 தயார்.